News August 10, 2024
EPFO அட்வான்ஸ் பெறுவது எப்படி?

மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக EPFO முன்பணம் வழங்குகிறது. EPFO இணையதளம் சென்று UAN, Password பயன்படுத்தி உள்நுழையவும். ஆன்லைன் சேவைகள் பிரிவில் ‘Claim’ விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். PF Advance Form 31 விருப்பத்தை தேர்வு செய்து, வங்கி அட்டையின் முதல் பக்கத்தை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். தொடர்ந்து OTP-ஐ உள்ளீடு செய்து விண்ணப்பித்தால் 3-20 நாள்களுக்குள் பணம் கிடைக்கும்.
Similar News
News December 15, 2025
இளம் வயதினர் மரணங்களுக்கு Corona தடுப்பூசி காரணமா?

இளம் வயதினர் திடீரென மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பது குறித்து டெல்லி எய்ம்ஸ் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணத்திற்கு தொடர்பு இல்லை என எய்ம்ஸ் டாக்டர் சுதிர் அரவா தெரிவித்துள்ளார். இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, மதுப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
News December 15, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 15, கார்த்திகை 29 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News December 15, 2025
கேரளாவில் பாஜகவின் வளர்ச்சி அச்சுறுத்தலானது: சிபிஐ

கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை எனவும், சபரிமலை தங்க திருட்டு விவகாரம் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் CPI மாநில செயலாளர் பினாய் விஷ்வம் தெரிவித்துள்ளார். அதேசமயம் <<18551942>>கேரளாவில் பாஜக <<>>எழுச்சி அடைந்துள்ளது பெரிய அச்சுறுத்தலான விவகாரம் என்றும் கூறியுள்ளார்.


