News May 28, 2024
சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் ரத்து

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு காரணமும் சொல்லாமல், டெல்லியில் இன்று நடைபெறவிருந்த கூட்டத்தை, அதிகாரிகள் திடீரென ரத்து செய்துள்ளனர். முல்லைப் பெரியாற்றில் தற்போதுள்ள அணையை இடித்து, புதிய அணை கட்ட கேரளா அரசு முடிவு செய்துள்ளது. இதனை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.
Similar News
News March 3, 2026
இன்று மாலை 3:20-க்கு இதை மிஸ் பண்ணிடாதீங்க..

‘பிளட் மூன்’ எனப்படும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. நிலா அடர் ஆரஞ்ச் நிறத்தில், நீல விளிம்புடன் ஒளிரவுள்ளது. சென்னையில் இந்த கிரகணத்தின் இறுதி பகுதி மட்டுமே தெரியுமாம். மாலை 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:47 மணி வரை நிலா ரத்த சிவப்பு நிறத்தில் ஒளிரவுள்ளதாம். தொலைநோக்கி வழியாக இந்த கிரகணத்தை மக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
தவெகவுடன் காங்கிரஸா? செல்வப்பெருந்தகை

தவெகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக வெளியாகும் தகவலுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். தவெகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச கட்சித் தலைமை, மாநிலத் தலைவரான தன்னிடம் இதுவரை எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், பின்வாசல் அரசியல் செய்ய வேண்டிய அவசியமும் தங்களுக்கு இல்லை என்ற அவர், திமுகவுடனே கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளோம் என்றார்.
News March 3, 2026
மாரடைப்பு வருவதை முன்பே கண்டறிய..

மாரடைப்புகள் தற்போது அதிகளவில் ஏற்பட தொடங்கி விட்டன. சில சோதனைகள் மூலம் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகிறார்கள். இந்த டெஸ்ட்டுகளை எடுத்துப்பாருங்கள்: Waist circumference, HbA1C, CT கரோனரி ஆஞ்சியோகிராம், எக்கோ கார்டியோகிராம், ECG. மாரடைப்பிற்கு சிகரெட், தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.


