News August 8, 2024

நாளை முதல் காரையாறு கோவிலுக்கு அனுமதி

image

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து நேற்றும், இன்றும் கோவில் வளாக பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் நாளை முதல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் சென்று வழிபடுவதற்கு வனத்துறை சார்பில் அனுமதிக்கப்படுவதாக இன்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News

News November 20, 2025

நெல்லை: ரயில்வே வேலை., மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

image

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400. டிகிரி முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 20, 2025

நெல்லை: மின் கம்பத்தில் மோதி புது மாப்பிள்ளை பலி

image

திருப்புடைமருதூரை சேர்ந்தவர் சங்கர் (29). இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு பணிபுரிந்து பைக்கில் வீட்டிற்கு சென்ற போது வெள்ளாங்குழி உப்பூர் பகுதியில் மின் கம்பத்தில் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 20, 2025

பாளையங்கோட்டையில் விசாரனை கைதி தற்கொலை

image

ஆய்க்குடியை சேர்ந்த திருமலை குமார் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மது போதையில் பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்டதாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கைதாகி திருமலை குமார் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

error: Content is protected !!