News July 3, 2024

தரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்க: அரசு

image

தமிழகம் முழுவதும் குடிநீர் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு, மலேரியா காய்ச்சலை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ள பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 19, 2025

3.5 பில்லியன் வாட்ஸ்அப் தரவுகள் ஆபத்தில் உள்ளதா?

image

தரவு கசிவு காரணமாக வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை ஆபத்தில் இருப்பதாக வியன்னா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள பெரிய பாதுகாப்பு குறைபாட்டை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். உலகளவில் 3.5 பில்லியன் பயனர்களின் தொலைபேசி எண் மற்றும் சுயவிவரத் தகவல் கசியும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர். மேலும், ஹேக்கிங் செய்யாமலேயே எளிதாக திருடலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

News November 19, 2025

PM மோடியிடம் 9 கோரிக்கைகள் வைத்த EPS

image

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை, PM மோடி விரைந்து நிறைவேற்றி தர வேண்டும் என EPS வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் PM மோடியை வரவேற்ற EPS, அவரிடம் இயற்கை விவசாயத்திற்கான ஆதரவு, பம்ப் செட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட 9 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார். மேலும், காகிதப் பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 5% ஆக குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 19, 2025

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், கோவை ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. நவ.22-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ள நிலையில், சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!