News February 28, 2025
போதும்… நிப்பாட்டுங்க… கடுப்பான அதிபர் டிரம்ப்!

அமெரிக்கா சென்றிருந்த பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். கனடாவுக்கு கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவெடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறீர்களா? அது நடக்காது என பதிலளித்துக் கொண்டிருந்தார். திடீரென இடையில் குறுக்கிட்ட டிரம்ப் போதும், நன்றி என முடித்துக் கொண்டார்.
Similar News
News February 28, 2025
முட்டை விலை வீழ்ச்சி

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை நேற்று 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.60ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், இன்றும் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ.4.60இல் இருந்து ரூ.4.20ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில்லரை விலையிலும் முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில்லரை கடைகளில் முட்டை ஒன்று ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
News February 28, 2025
TV, ஃபிரிட்ஜ்களிலும் வந்த டீப்சீக் AI!

சீனாவின் ஹையர், ஹை சென்ஸ், டிசிஎல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சாதனங்களில் டீப்சீக் AI டெக்னாலஜியை ஒருங்கிணைத்து வருகின்றன. புதிய மாடல் டிவி, ஃபிரிட்ஜ்கள், ரோபோ வேக்யூம் க்ளீனர்களை தயாரித்து வருகின்றன. நாம் கட்டளையிட்டாலே இந்த கருவிகள் இனி செயல்படும். ஏற்கனவே ஹூவேய், டென்செண்ட் நிறுவனங்களும் தங்கள் கருவிகளில் டீப்சீக் AI வசதியை கொண்டு வருவதாக அறிவித்துள்ளன.
News February 28, 2025
கடனை முடிக்கும் போது, இந்த ஆவணத்தை வாங்கிடுங்க!

கடனை அடைக்கும் போது, இந்த ஆவணங்களை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள். *அசல் சொத்து ஆவணங்கள் *‘No dues’ சர்டிபிகேட் *Non- Objection சர்டிபிகேட் *Non-Encumbrance சர்டிபிகேட் வில்லங்கமற்ற சான்றிதழ் *கடனை வாங்கும் போது பிந்தைய தேதியிட்ட கொடுத்த காசோலைகள் *கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான ஸ்டேட்மெண்ட் *கடனுக்கான சொத்தில் கொடுத்த உரிமையை நீக்குவது *புதுப்பிக்கப்பட்ட கடன் அறிக்கை. SHARE IT.