News November 18, 2024
WI அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. அந்த அணி 44 ரன்கள் எடுத்திருந்தபோது போது மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
Similar News
News March 12, 2026
இந்தியாவின் விவகாரங்களில் USA தலையிடுவதா? ராகுல்

நாம் யாரிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிப்பது சரியானது அல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், யாரிடம் வாங்க வேண்டும், யாரிடம் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு ஏன் அமெரிக்க அதிபர் அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 12, 2026
சிறுமிகளுக்கு எதிரான ரேப்… NCW-ல் அதிமுக MP புகார்

தமிழகத்தில் தொடர்ந்து வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) அதிமுக MP இன்பதுரை புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி, மதுராந்தகம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல பகுதிகளில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக சிறப்பு குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 12, 2026
அதிக உயிரிழப்புகள்.. இந்த விலங்குதான் டாப்பு!

சராசரியாக உலகளவில் ஆண்டுதோறும், மனித இறப்புகளுக்கு காரணமாக இருக்கும் விலங்குகளின் பட்டியலை WHO மற்று BBC Science Focus இணைந்து வெளியிட்டுள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் பட்டியலில், நாம் நினைத்து பார்க்காத விலங்குகள் இடம்பிடித்துள்ளன. எந்த உயிரினத்தால், எவ்வளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


