News March 1, 2025
இங்கிலாந்து அணி பேட்டிங்

சாம்பியன்ஸ் டிராஃபி ODI தொடரில் இன்று, இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. கராச்சி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ENG அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த ENG அணி, தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ENG அணி ரசிகர்கள் உள்ளனர்.
Similar News
News March 1, 2025
14ஆவது குழந்தைக்கு அப்பா ஆனார் எலான் மஸ்க்

டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், 14ஆவது குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார். எலான் மஸ்க், அவரின் 4ஆவது மனைவி சிவோன் ஜிலிஸ் தம்பதிக்கு 4ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு செல்டன் லைகர்கஸ் எனப் பெயரிட்டுள்ளனர். இதுதவிர்த்து, எலான் மஸ்க் மற்றும் அவரின் மற்ற 3 மனைவிகளுக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளன. அண்மையில் எழுத்தாளர் ஒருவர், மஸ்கிற்கு குழந்தை பெற்றிருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 1, 2025
உலகின் மிக வயதான கிரிக்கெட் வீரர் மரணம்

உலகின் மிக வயதான கிரிக்கெட்டர் என அழைக்கப்பட்ட தெ.ஆப்பிரிக்க EX வீரர் ரோன் டிராபர் (98) காலமானார். தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான அவர், 1950ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்டுகளில் விளையாடினார். இதையடுத்து உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். அதில் தொடர்ந்து 2 சதம் விளாசிய முதல் தெ.ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனை படைத்தார். அவரின் சராசரி ரன் குவிப்பு 41.64%ஆகும்.
News March 1, 2025
வந்தே பாரத் ரயிலிலும் தமிழ் புறக்கணிப்பு

தமிழ்நாட்டிற்குள் ஓடும் வந்தே பாரத் ரயிலிலும், தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை-நெல்லை இடையே செல்லும் வந்தே பாரத் ரயிலில் ஒரு இடத்தில் கூட தமிழ் இல்லை. முழுவதும் இந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. I R என்பதையும் (Indian Railway) இந்தியில் பா ஆர் (பாரத் ரயில்வே) என எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் இந்த ரயில் சென்னை ICFல் தயாரிக்கப்பட்டது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.