News February 26, 2025
முக்கிய விக்கெட்டை இழந்து தடுமாறும் இங்கி.,

ICC Champions Trophy: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் ENG முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 326 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ENG 25 ஓவரில் 4 விக்கெட்டை பறிகொடுத்து 147 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இன்னும் 150 பந்துகளில் 179 ரன்கள் எடுக்க வேண்டும். ஜோ ரூட் 51*, பட்லர்25* களத்தில் இருப்பதால், கொஞ்சம் நம்பிக்கையுடன் ரசிகர்கள் வெற்றிக்காக காத்திருக்கின்றனர்.
Similar News
News March 3, 2026
ஈரான் அரசு என்னை கொன்னுடும்.. பயத்தில் நடிகை!

பிரபல ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் அரசாங்கம் தன்னை கொன்றுவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கமேனி மரணமடைந்ததை கொண்டாடிய அவர், அந்நாட்டின் அரசு கவிழும் வரை அங்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். ஈரானில் பிறந்த நோரூசி, 8 வயதில் வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் வசித்து வரும் அவர், ‘Sacred Games’ உள்பட பல இந்திய மொழி படங்கள், வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
News March 3, 2026
கேவலம்: சஞ்சுவுக்கு எதிராக இனவெறி கருத்து!

WI அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய அணியை சஞ்சு சாம்சன் கரைசேர்த்தார். அவரை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வரும் நிலையில், X தளத்தில், கருப்பானவரால் தான், கருப்பினத்தவர்களை வீழ்த்த முடியும் என மிகவும் கேவலமான ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்திய ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக கண்டித்த நிலையில், அப்பதிவு தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது. இவர்களையெல்லாம் என்ன செய்வது?
News March 3, 2026
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

மூத்த காங்., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.பி. உன்னிகிருஷ்ணன் (90) காலமானார். கோழிக்கோடு வடகரா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை (1971-1996) MP-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வி.பி.சிங் அமைச்சரவையில் (1989-90) மத்திய தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராகப் பணியாற்றினார். வளைகுடா போரின்போது இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றியவர்.


