News July 8, 2025
கில்லிடமிருந்து இங்கி., வீரர் கற்க வேண்டும்: வாகன்

தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி, இங்கி., அணிக்காக விளையாடுவதே ’அதிர்ஷ்டம்’ என விமர்சித்துள்ளார் மைக்கல் வாகன். 56 போட்டிகளில் 31 தான் கிராவ்லியின் சராசரி, சுப்மன் கில் இத்தொடருக்கு வரும்போது 35 என்ற சராசரியில் இருந்தார், தற்போது 42-ஆக உயர்ந்துள்ளது. முதலில் தற்காப்பில் கவனம் செலுத்தி, பின்னர் மோசமான பந்துகளை தாக்கினார். இதனை கிராவ்லி கில்லிடமிருந்து கற்க வேண்டுமென்றார்.
Similar News
News July 8, 2025
நயினார்னு யாரையும் தெரியாதே.. TN BJP பரிதாபங்கள்

வடசேரியில் இருக்கும் கிளைச் செயலாளருக்கு போன் செய்தபோது, தன்னை யாரென்றே தெரியாது என்று எதிர்முனையில் பேசியவர் கூறியதாக நயினார் நாகேந்திரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், நயினார் என்பதை ‘நைனாவா?’ எனக் கேட்பதாகவும் கூறி வருத்தப்பட்டுள்ளார். இவ்வாறு தமிழக பாஜக ஆலோசனை மேடையிலேயே போட்டுடைத்த நாகேந்திரனின் குமுறலை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
News July 8, 2025
செவ்வாய் தோஷம் நீங்க…

செவ்வாய் பகவானை, இந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். திருமணம், சொந்த வீடு கனவு போன்றவை கைகூடும் என்பது ஐதீகம்.
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்.
அர்த்தம்: வீரக் கொடியைக் கொண்டவரும், விக்னங்களைத் தீர்க்கும் கையை உடையவருமான செவ்வாய் பகவானை நாங்கள் தியானிக்கிறோம். அவர் எங்களை ஆசீர்வதிப்பாராக!
News July 8, 2025
4 ஆய்வறிக்கைகளை சமர்பித்த மாநில திட்டக்குழு

மாநில திட்டக்குழுவானது தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களின் தாக்கங்கள், அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதோடு, அரசு கொள்கை முடிவெடுக்கின்ற வகையில் பல துறைகளில் ஆய்வு செய்து அறிக்கைகளை சமர்ப்பிக்கிறது. அந்தவகையில் தற்போது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு, சுரங்கங்கள் சீரமைப்பு, காலநிலை மாற்றம், வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஆய்வறிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.