News June 28, 2024
இந்திய வீரர்களை புகழ்ந்த ENG கேப்டன்

இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் அசத்தலான பவுலிங் அட்டாக் தான் தங்களுடைய தோல்விக்கு காரணம் என ENG கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார். சவாலான சூழலிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக பேசிய அவர், இந்தியா இந்த வெற்றிக்கு முழுமையாகத் தகுதியுடையது என கூறியுள்ளார். மேலும், 20 – 25 ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுத்து விட்டதாகவும், 2022 அரையிறுதிப் போட்டியில் இருந்த நிலைமை மாறிவிட்டதாகவும் கூறினார்.
Similar News
News November 26, 2025
ஜனநாயகன் டிரெய்லர் எப்போது?

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டிரெய்லர் புத்தாண்டு தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஜன.9-ல் பொங்கல் ரிலீஸாக களம் காணவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிச.27-ல் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் அனுராதா ஸ்ரீராம், ஆண்ட்ரியா, சைந்தவி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர்.
News November 26, 2025
பகட்டான கொண்டாட்டங்களை விரும்புவதில்லை: உதயநிதி

DCM உதயநிதி ஸ்டாலின், நாளை (நவ.27) தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பகட்டான கொண்டாட்டங்களை தான் விரும்புவதில்லை என்ற உதயநிதி, தன்னுடைய பிறந்தநாளில், கொள்கை பணியும் மக்கள் பணியும் இணைந்து இருந்தாலே தனக்கு மனநிறைவை தரும் என்றும் கூறியுள்ளார். எனவே, மாநிலம் முழுவதும் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 26, 2025
செங்கோட்டையனுக்கு விஜய் கட்சியில் முக்கிய பதவி!

தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்புச் செயலாளர் என்பவர், ஒரு அரசியல் கட்சியின் அமைப்புகளை நிர்வகிக்கும் மற்றும் வலுப்படுத்தும் பணிகளை செய்யும் நபராக இருப்பார். இந்த பதவி, கட்சிகளின் பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.


