News March 21, 2024
விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக உடன் கூட்டணியை முறித்துகொண்ட அதிமுக இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 21, 2026
எல்லாவற்றிலும் முந்தும் சீமான்

மார்ச் 23 முதல் முதற்கட்ட பிரசார சுற்றுப்பயணத்தை சீமான் மேற்கொள்ளவுள்ளார். திருத்தணி முருகனை தரிசித்துவிட்டு பரப்புரையை தொடங்கும் அவர், மார்ச் 28-ல் ஆவடியில் முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே 234 தொகுதிகளுக்கும் சீமான் வேட்பாளர்களை அறிவித்தார். சமீபத்தில் நாதக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறார்.
News March 21, 2026
மனைவி வேறு ஒருவருடன் சென்றால்… ஐகோர்ட் அதிரடி

தென்காசியை சேர்ந்த நபர், தனது மனைவி, இரு குழந்தைகளை மீட்கக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த மதுரை ஐகோர்ட், மனைவி வேறு ஒருவருடன் செல்ல முடிவெடுத்தால், ஆட்கொணர்வு மனு மூலம் அவரை கட்டாயப்படுத்தி மீட்க நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறியுள்ளது. எனினும், குழந்தைகளையும் மனைவியையும் கோர்டில் ஆஜர்படுத்தவும் (குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்த) உத்தரவிட்டது.
News March 21, 2026
கழுத்தில் 12 செமீ குச்சியுடன் 8 ஆண்டுகள் வாழ்ந்தவர்!

சீனாவில் கழுத்து வலி என வந்தவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது, தொண்டையில் 12 செமீ நீளமுள்ள சாப்ஸ்டிக் இருந்ததை கண்டு டாக்டர்கள் அதிர்ந்துள்ளனர். ஆனால், அந்த நோயாளி எந்த சலனமும் இன்றி, அது 8 ஆண்டுகளாக தொண்டையில் இருப்பதாக கூறியுள்ளார். மதுபோதையில் நூடுல்ஸ் என நினைத்து சாப்ஸ்டிக்கை விழுங்கியவர், Operation-க்கு பயந்து அப்படியே விட்டுவிட்டாராம். தற்போது வலி தாங்காமல் ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளார்.


