News September 3, 2024
வாகன வேகம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாகன வேகத்தை கண்காணிக்க அனுமதிக்கும் மோட்டார் வாகன சட்டத்தின் 136ஏ பிரிவை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு SC உத்தரவிட்டுள்ளது. 136ஏ பிரிவில் வாகன வேகங்களை இயந்திரங்கள் மூலம் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த SC, 136ஏ சட்டப் பிரிவை அமல்படுத்தி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டது.
Similar News
News August 20, 2025
தனியாருக்கு தூய்மைப் பணிகள்: HC முக்கிய உத்தரவு

சென்னை மாநகராட்சியில் (GCC) தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராக உழைப்போர் உரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த HC, மண்டலம் 5, 6-ல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான GCC தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது. இதற்காக போராட்டமும் நடைபெற்றது.
News August 20, 2025
GST வரி மாற்றம்: நாடு முழுவதும் விலை குறைகிறது

GST வரி விதிப்பில் மத்திய அரசு மாற்றம் செய்யவுள்ளது. 5%, 12%, 18% மற்றும் 28% ஆக உள்ள வரி முறைகள் 5%, 18% மற்றும் 40% ஆக மாறவுள்ளது. இதனால், நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய டூத் பேஸ்ட், குடை, பிரஷர் குக்கர், சிறிய அளவிலான வாஷிங் மெஷின், செல்போன், காலணிகள், ஆடைகள், மருந்து உள்ளிட்டவற்றின் விலை குறையும். அதேநேரம், புகையிலை, சூதாட்டம் ஆகிவற்றின் விலை உயரும் எனக் கூறப்படுகிறது. SHARE IT.
News August 20, 2025
அப்போ மாடு; இப்போ மரம்.. சீமானின் புதிய மாநாடு

மதுரையில் எழுச்சி பொங்க ஆடு, மாடுகளுக்கு முன் சீமான் ஆற்றிய உரை இணையத்தில் டிரெண்டானது. இதனால் அடுத்தது மரங்களோடு தான் மாநாடு என ஆல் ஏரியாவும் அதிர்ந்துபோகும் அளவிற்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார் சீமான். இந்நிலையில், திருவள்ளூரில் அக்.30-ல் நடக்கவுள்ள மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை அவர் பார்வையிட்டிருக்கிறார். இதன் ஃபோட்டோஸ் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிவருகிறது. உங்கள் கருத்து?