News December 8, 2024
முடிவுக்கு வந்த சிராஜ்-ஹெட் சண்டை

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஹெட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆட்டம் முடிந்த பிறகு சிராஜ் வெளியே வந்து இது ஒரு தவறான புரிதல். நாம் அந்த சம்பவத்தில் இருந்து விலகிவிடுவோம். ஒரு சிறந்த வாரத்தை அழிக்க வேண்டாம். நாங்கள் இருவரும் sweet அதை மறந்துவிட்டோம். அதை மறக்க விரும்புகிறோம்”. இதன்மூலம் ஒருவழியாக சிராஜ்-ஹெட் சண்டை ஒரு முடிவுக்கு வந்தது.
Similar News
News March 3, 2026
திருவள்ளூர்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!

பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(57). இவர், பொன்னேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 7 வயது பள்ளி மாணவிக்கு டிரைவர் பன்னீர் செல்வம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.
News March 3, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $20 (இந்திய மதிப்பில் ₹1,831) குறைந்து $5,352.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $5 குறைந்து $90.36-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 3, 2026
World Dosa day: தோசை உருவான வரலாறு தெரியுமா..?

வாரத்தில் 7 நாள் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் ஆள்கள்தான் அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7-ம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை கமெண்ட் பண்ணுங்க!


