News March 25, 2025
கூட்டணி பேச்சுக்கு முற்றுப்புள்ளி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை EPS சந்தித்துள்ள நிலையில், இதில் கூட்டணி கணக்கு ஒன்றும் இல்லை என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானலும் சந்திக்கலாம் என்று கூறியிருக்கும் அவர், கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேட்டியளித்திருக்கிறார்.
Similar News
News December 5, 2025
போத்தனூர்–பரௌனி ரயில் தாமதமாக இயக்கப்படும்

சேலம்–ஈரோடு ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூர்–பரௌனி விரைவு ரயில் டிசம்பர் 6, 13, 20 மற்றும் 27 ஆம் தேதிகளில் தாமதமாக இயங்கும். வழக்கமான 11.50 மணிக்கு பதிலாக, ரயில் 50 நிமிட தாமதத்துடன் மதியம் 12.40 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
News December 5, 2025
மதுரை மக்களுக்கு இதுதான் வேண்டும்: CM ஸ்டாலின்

மெட்ரோ ரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகளை தான் மதுரை மக்கள் கேட்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சர்ச்சையை குறிப்பிட்டு பதிவிட்ட அவர், ‘மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது …….. அரசியலா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்’ என சூசகமாக மத்திய பாஜக அரசை சாடியுள்ளார். மதுரை மெட்ரோவுக்கான TN அரசின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்தது. இன்று(டிச.5) 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹20 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹160 குறைந்து ₹96,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலையே தங்கம் விலை சரிவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


