News April 2, 2025
தமிழகத்தில் அடுத்தடுத்து என்கவுண்ட்டர்

கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 4 என்கவுண்ட்டர்களை போலீசார் செய்துள்ளனர். இன்று புதுச்சேரி வழிப்பறி கொள்ளையன் விஜய், கடலூரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று மதுரையிலும் மூன்று தினங்களுக்கு முன் கம்பம் பகுதியிலும் என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது. அதேபோல, மார்ச் 28ஆம் தேதி செங்கல்பட்டில் ஒரு ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
Similar News
News September 24, 2025
ரஷ்யா ஒரு அட்டக்கத்தி: டிரம்ப்

நேட்டோ நாடுகளின் துணையுடன் ரஷ்யாவிடம் தான் இழந்த பகுதிகளை உக்ரைன் திரும்ப பெற வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில் முடித்திருக்க வேண்டிய போரை, ரஷ்யா மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாகவும், இது அந்த நாடு ஒரு பேப்பர் புலி என்பதை நிரூபிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். சமீபகாலமாக உக்ரைனுக்கு எதிராக பேசி வந்த டிரம்ப், முதல்முறையாக ஆதரவாக பேசியுள்ளார்.
News September 24, 2025
சற்றுமுன்: மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்?

டிடிவியை தொடர்ந்து, OPS உடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லி சந்திப்பின்போது, OPS-ஐ அதிமுகவில் சேர்க்க முடியாது; ஆனால், NDA கூட்டணியில் சேர்க்கலாம் என EPS கூறியிருந்தார். இதனையடுத்து, டிடிவி, ஓபிஎஸ்ஸை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் பொறுப்பு அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அவரும், கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
News September 24, 2025
வயிற்று கொழுப்பு குறைய இந்த யோகா பண்ணுங்க!

உத்தான பாதாசனம் செய்வதால் செரிமான உறுப்புகள் வலிமையடைந்து, மலச்சிக்கல் பிரச்னை நீங்குவதுடன், வயிற்று கொழுப்பும் குறையும் ✦2 கால்களும் சேர்ந்து வைத்து, மல்லாந்து படுக்கவும் ✦கால்களை மடக்காமல் மேலே உயர்த்தவும். முடிந்தவரை உயர்த்தினால் போதும் ✦2 கைகளையும் உடலுக்கு பக்கத்தில்(படத்தில் உள்ளது போல) வைக்கவும் ✦இந்த நிலையில், 10- 20 விநாடிகள் இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.