News April 23, 2025
2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா வழியே இந்தியாவுக்குள் இன்று தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். அப்போது எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்மூலம் அங்கு நடக்கவிருந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 23, 2025
தீவிரவாதிகள் அனைவரையும் வேட்டையாடுவோம்: ராஜ்நாத்

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதிகள் அனைவரையும் வேட்டையாடுவோம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார். இக்கொடுந்தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் எனவும், தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்துக் கொள்ளாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற தாக்குதல்களால் இந்தியாவை மிரட்ட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News April 23, 2025
25 ஆண்டுகளுக்கு முன் இதே பாணியில் தாக்குதல்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்திருக்கும் சூழலில், பஹல்காமில் தாக்குதல் நடந்திருக்கிறது. இதேபோல், 25 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவ சீருடை அணிந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் அனந்த்நாக்கின் சித்திசிங்பூரில் உள்ள குருத்வாராவில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 35 அப்பாவி சீக்கியர்கள் உயிரிழந்தனர்.
News April 23, 2025
அமைச்சர் பதவியா? ஜாமினா? செந்தில் பாலாஜிக்கு செக்

அமைச்சர் பதவி வேண்டுமா?, ஜாமின் வேண்டுமா என செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் செக் வைத்துள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார் என எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமைச்சர் பதவியா? ஜாமினா? என்பதை (இரண்டில் ஒன்று) திங்கட்கிழமை தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.