News April 7, 2025

₹250 கோடி வசூலை வாரிக் குவித்த ‘எம்புரான்’…!

image

மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற எம்புரான் திரைப்படம், அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படம் ₹242 கோடி வசூல் செய்த நிலையில், இந்த படம் 10 நாட்களில் ₹250 கோடியை கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்புரான் படத்தில் அரசியல் ரீதியான சர்ச்சை காட்சிகள் இருந்ததாக வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 17, 2025

வக்ஃப் திருத்தச் சட்டம்: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

image

வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையில் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை, எனினும் சில <<16127973>>நிபந்தனைகளை <<>>மட்டும் விதித்துள்ளது. தகுந்த ஆவணங்களுடன் 7 நாட்களில் மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 17, 2025

தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை

image

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 10,11,12ம் வகுப்பு, 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. ஜூன் 1 வரை அவர்களுக்கு 45 நாள்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது. அதேபோல் சில தனியார் பள்ளிகள் ஜூன் 4-ம் தேதியும், வேறு சில தனியார் பள்ளிகள் ஜூன் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனக் கூறியுள்ளன. இதை கணக்கிட்டால் 49-52 நாள்கள் விடுமுறை வருகின்றன. உங்களுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?

News April 17, 2025

போனை யூஸ் பண்ணாமல் 3 நாள்களுக்கு விட்டால்..

image

தானாகவே போன் Reboot ஆகும் அம்சத்தை Google Play Services 25.14 அப்டேட்டில் Android சேர்த்துள்ளது. இது ‘Inactivity Reboot’ என அழைக்கப்படுகிறது. போன் 3 நாளுக்கு யூஸ் செய்யப்படாமல் இருந்தால், தானாகவே ‘Before First Unlock’(BFU) என்ற நிலையை போன் அடையும். கரெக்ட்டான பாஸ்வோர்டை பதிவிட்டால் மட்டுமே, போனை திறக்க முடியும். இல்லையேல், போன் மொத்தமாக Reboot ஆகி விடும்.

error: Content is protected !!