News April 7, 2025
₹250 கோடி வசூலை வாரிக் குவித்த ‘எம்புரான்’…!

மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற எம்புரான் திரைப்படம், அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படம் ₹242 கோடி வசூல் செய்த நிலையில், இந்த படம் 10 நாட்களில் ₹250 கோடியை கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்புரான் படத்தில் அரசியல் ரீதியான சர்ச்சை காட்சிகள் இருந்ததாக வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 9, 2025
கெடு முடிந்தது… சீனாவுக்கு 104% வரி

சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால், ஏப்ரல் 9-ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்கா கொடுத்த 24 மணி நேர கெடு முடித்தும் சீனா வரிவிதிப்பை திரும்பப்பெறவில்லை. இதனையடுத்து சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 9, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை.
▶குறள் எண்: 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என். ▶பொருள்: தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.
News April 9, 2025
தோனியின் ஆவேசம் வீண்.. தொடரும் சோகம்

ஆட்டங்களை முடித்து வைப்பதில் வல்லவரான தோனிக்கு இந்த சீசன் மிக மோசமாக அமைந்துள்ளது. தோனி இருக்கிறார் வெற்றி நிச்சயம் என நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. இன்றைய ஆட்டத்திலும் அது மாறவில்லை. நேற்று 5வது வீரராக களமிறங்கிய தோனி 12 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். எனினும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. மீண்டு வருமா சென்னை?