News November 20, 2024
WHATSAPPஇல் வேலைவாய்ப்பு LINK? போலீஸ் எச்சரிக்கை

சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் WHATSAPP தளத்திலோ, SMS மூலமோ வரும் வேலைவாய்ப்பு LINK-ஐ நம்பி நிதி தகவலை பகிர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர். அதிலுள்ள லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். பணம் கேட்டால் அனுப்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து www.cybercrime.gov.in, 1930 எண்ணில் புகார் அளிக்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 8, 2025
INTERNET வேண்டாம்.. மொபைல் மூலம் பணம் அனுப்பலாம்

இனி இண்டெர்நெட் இல்லாமலும் UPI பணப்பரிவர்த்தனை செய்யலாம் என NPCI தெரிவித்துள்ளது. உங்கள் பேங்க் அக்கவுண்ட்டில் லிங்க் செய்யப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிலிருந்து, ‘*99#’ என்பதற்கு டயல் செய்யவும். கேட்கும் விவரங்களை அடுத்தடுத்து உள்ளீடு செய்து, அக்கவுண்ட்டை ஆஃப்லைனில் பதிவுசெய்ய வேண்டும். பின், மீண்டும் ‘*99#’ என்பதற்கு டயல் செய்து, தேவைப்படும் நபருக்கு, ஒரு பரிவர்த்தனைக்கு ₹5,000 வரை அனுப்பலாம்.
News December 8, 2025
ED கடிதம் கிடைத்தது எப்படி? CBCID-க்கு மாற்றிய TN அரசு

நகராட்சி நிர்வாக துறையில் அரசுப் பணி வழங்கியதில் ₹250 கோடி முறைகேடு நடந்துள்ளது பற்றி தமிழக டிஜிபி வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என ED கடிதம் எழுதியதாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த HC, ED எழுதியதாக கூறப்படும் கடிதம் எப்படி மனுதாரருக்கு கிடைத்தது என கேள்வி எழுப்பியது. இதனை போலீஸ் விசாரித்து வந்த நிலையில், விசாரணை CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளது.
News December 8, 2025
தூங்கும் முன் இந்த சிம்பிளான விஷயங்களை செய்யுங்கள்

தூக்கத்தை கூட ஆரோக்கியமாக அணுக வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே, தூங்க செல்வதற்கு முன் வாயை நன்றாக 2, 3 முறை கொப்பளியுங்கள். பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். கை விரல்களையும் நன்றாக சுத்தம் செய்யுங்கள். பாய், தலையணை, போர்வை, பெட் ஆகியவற்றை உதறிவிடுங்கள். தூங்கும் நேரத்தில் உள்ளாடைகள் போடுவதை முடிந்த அளவு தவிருங்கள். அன்றைக்கு நடந்த இனிய நிகழ்வுகளை எண்ணியவாறே தூங்குங்கள். Good Night


