News January 9, 2025
UAEஇல் வேலைவாய்ப்பு.. நீங்க ரெடியா?

Mech டிப்ளமோ, ITI படித்து அனுபவம் உள்ளவர்களுக்கு UAEஇல் தங்குமிடம், உணவுடன் வேலை உள்ளதாக தமிழ்நாடு அரசின் Overseas Manpower Corporation அறிவித்துள்ளது. வேலைகள், தகுதி, வயது வரம்பு ஆகிய விவரங்களை அறிவதற்கான இணையதளம்: www.omcmanpower.tn.gov.in தொலைபேசி எண் 044-22502267. WhatsApp எண் 9566239685. பயோ டேட்டாவை ovemclnm@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பலாம். வேலை தேடும் நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 18, 2026
BREAKING: விஜய் தரப்புக்கு அடுத்த சம்மன் அனுப்பிய CBI

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் தவெக வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு CBI சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே விஜய் உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். நாளையும் விஜய் ஆஜராக உள்ளார். இந்நிலையில், மீண்டும் தங்கள் தரப்புக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் விஜய் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
News January 18, 2026
மக்களே உஷார்! சத்தான கீரைகளிலும் வந்தாச்சு சிக்கல்

ஆரோக்கியமாக வாழ சத்தான உணவுகளை உண்ணுவது அவசியம். அப்படி டாக்டர்கள் அனைவராலும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவு கீரைகள். ஆனால், தற்போது சத்தான உணவு என நாம் விரும்பி உண்ணும் கீரைகளில், அதிக விளைச்சலுக்காக தெளிக்கப்படும் ‘களைக்கொல்லி’ ரசாயனங்கள், மனித உயிர் மட்டுமின்றி உயிரணுக்களுக்கே சவாலாக மாறியுள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். என்ன பாதிப்பு? எப்படி தடுப்பது? என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க.
News January 18, 2026
மணிப்பூர் துயரம்: நீதி கிடைக்காமலேயே பிரிந்த உயிர்

மே 2023-ல் மணிப்பூர் கலவரத்தில் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 20 வயது குக்கி பழங்குடியின பெண், ஆறாத ரணங்களுடன் போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பயங்கர சம்பவம் தந்த மன உளைச்சலும், உடல்நல பாதிப்புமே அவரது மரணத்திற்கு காரணமாகியுள்ளது. இந்நிலையில், தனது மகள் உயிருடன் இருந்தவரைக்கும் அவளுக்கு நீதி கிடைக்கவில்லை என பெற்றோர் கதறுவது நெஞ்சை உலுக்குகிறது.


