News October 1, 2025

உதவித்தொகையுடன் தமிழக அரசில் வேலைவாய்ப்பு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 1,588 தொழிற்பயிற்சி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: B.E, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி ஆகிய ஏதாவது ஒன்றை 2021 – 2025-க்குள் முடித்திருக்க வேண்டும். உதவித்தொகை: டிகிரி முடித்தவர்களுக்கு ₹9,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ₹8,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.18. இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். Share it

Similar News

News March 17, 2026

கூட்டணியில் இருந்து NR காங்., விலகல்? அரசியல் பரபரப்பு

image

புதிதாக தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சியால்(LJK) புதுச்சேரி NDA கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆளும் NR காங்கிரஸுக்கு 16, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 14 சீட்டுகள் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால், தற்போது LJK-வுக்கும் சீட்டுகள் வேண்டும் என பாஜக, NR காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுப்பதால், கூட்டணியில் வெளியேறுவோம் என ரங்கசாமி திட்டவட்டமாக கூறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

News March 17, 2026

₹19,000 சம்பளம்.. ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்!

image

11,127 துணை லோகோ பைலட்டுகளை நிரப்புவதற்கான மெகா வேலைவாய்ப்பை RRB அறிவித்துள்ளது. பதவிகளுக்கேற்ப 10th – டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். ₹19,900 – ₹63,200 சம்பளம் வழங்கப்படும். 18 – 30 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப்பதிவு மே 15-ல் தொடங்கி ஜூன் 14 உடன் முடிவடைகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 17, 2026

வெள்ளி விலை மீண்டும் ஏறுமுகம்!

image

கடந்த சில நாள்களாக வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று தலைகீழ் மாற்றமாக விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ₹4 உயர்ந்து ₹280-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 உயர்ந்து ₹2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் இன்று தங்கம் <<19404687>>விலை சவரனுக்கு ₹480<<>> குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!