News October 16, 2025

10-ம் வகுப்பு தகுதியில் ராணுவத்தில் வேலைவாய்ப்பு

image

ராணுவ தள பணிமனைகளில் வெல்டர், கிளார்க், மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஸ்டோர் கீப்பர், ஃபிட்டர் உள்ளிட்ட 194 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ 12th/ ITI. வயது வரம்பு: 18 – 25. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, உடற்தகுதி. சம்பளம்: ₹5,200 – ₹20,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.24. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். Share it

Similar News

News October 16, 2025

ரூபாய் மதிப்பை சந்தை தீர்மானிக்கும்: RBI கவர்னர்

image

இந்தியா, ஒரு குறிப்பிட்ட நாட்டின் கரன்சி மதிப்பை இலக்காக கொண்டு செயல்படவில்லை என்று RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் வர்த்தக கொள்கைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, ரூபாய் மதிப்பு வீழ்ச்சிப் போக்கில் இருந்து வருகிறது. இந்நிலையில், ரூபாயின் மதிப்பை சந்தைகளே தீர்மானிக்க வேண்டும் என தான் நம்புவதாக சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.

News October 16, 2025

போட்டோவை வைத்து பாக்.,ஐ ட்ரோல் செய்த இந்தியா

image

கஜகஸ்தான் மேஜர் ஜெனரல் உடன் இந்திய ராணுவ தளபதி சந்தித்த போட்டோ வெளியானது முதல், இந்தியா பாக்.,ஐ மறைமுகமாக ட்ரோல் செய்ததாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். காரணம், அந்த போட்டோவுக்குள் இருக்கும் போட்டோ, 1971-ல் அப்போதைய பாக்., ராணுவ ஜெனரல் அமீர் அப்துல்லா கான் நியாஸி, இந்திய ராணுவத்திடம் 93,000 படைவீரர்களோடு சரணடைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை குறிக்கிறது. இதன் பிறகே வங்கதேசம் நாடு உருவானது.

News October 16, 2025

இதுதான் வடகிழக்கு பருவமழை..!

image

நிலம் கடலுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடு காரணமாக பருவமழை ஏற்படுகிறது. நிலப்பரப்பில் உருவாகும் உயர் அழுத்தத்தால் காற்று வடகிழக்கு திசையில் வீசுகிறது. இது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து, தமிழகம் மற்றும் இந்திய கிழக்கு கடற்கரை பகுதிகளில் மழையை தருகிறது. இதுவே வடகிழக்கு பருவமழை. இது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை நிகழ்கிறது. இதை, ‘பின்னடையும் பருவமழை’ என்றும் அழைக்கின்றனர்.

error: Content is protected !!