News August 3, 2024
SFIO அமைப்பில் வேலைவாய்ப்பு

SFIO எனப்படும் தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகம், 43 காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர், துணை இயக்குனர் உள்ளிட்ட பதவிகளுக்கு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத்தில் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்ய இருப்பதாகவும், விவரங்களுக்கு sfio.gov.in அல்லது www.mcs.gov.in இணையதளத்தை பார்க்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News December 3, 2025
கொலை மிரட்டல் வழக்கில் சீமானுக்கு சம்மன்

புதுச்சேரியில், செய்தியாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஏற்கெனவே நாதகவின் நிர்வாகிகள் சுந்தரபாண்டி, செல்வம் ஆகியோர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இந்நிலையில், டிச.8-ம் தேதி நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சீமானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர்.
News December 3, 2025
உள்ளூர் போட்டிகளில் களமிறங்கும் கோலி

டிச.24-ம் தேதி தொடங்கும் விஜய் ஹசாரே (VHT) தொடரில் டெல்லி அணிக்காக கோலி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் கோலி, 2027 WC வரை தனது ஃபார்மை மெயின்டெயின் செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளார். விஜய் ஹசாரே மட்டுமின்றி BCCI நடத்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாட கோலி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக 2010-ல் கோலி VHT-ல் ஆடியிருந்தார்.
News December 3, 2025
இந்தியாவில் 811 பேருக்கு ஒரு டாக்டர் மட்டுமே

இந்தியாவில் 811 பேருக்கு ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை சமாளிக்க மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பது, சுகாதார திட்டங்களை செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2014-ல் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 818 ஆகவும், UG இடங்கள் 1,28,875 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


