News June 19, 2024

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னையில் வேலைவாய்ப்பு (ம) தொழில் வழிகாட்டும் மையங்கள் சார்பில் கிண்டியில் வரும் 21ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இதில் 8, 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 5, 2026

சென்னை: நடிகை உடை மாற்றும் போது எட்டிப் பார்த்த நபர்

image

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் 31 வயதான நடிகை விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நடிகை உடைமாற்றும் போது ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் பார்த்துவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. நடிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் ராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 5, 2026

விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் – ஜெயக்குமார்

image

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களை சந்தித்தார். அப்போது விஜய் தன்னைப் போல பத்திரிகையாளர்களை சந்தித்து கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும், எழுதிக் கொடுக்கப்பட்டதை வாசிப்பது போதாது என்றார். அரசு பணத்தை திமுக அதிகமாக செலவிட்டாலும் வரும் தேர்தலில் தோல்வியடையும் என்றும், 5 ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது என கேள்வி எழுப்பினார்.

News March 4, 2026

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு இப்படி ஒரு சக்தியா?

image

பார்வதி தேவி சிவனிடம் திருநீறு பற்றி விளக்க கேட்க, சிவன் விளக்கமளித்தார். அங்கு மயில் ஆடுவதை பார்க்க, சிவன், ‘நீ மயில் உருப்பெற்றிடுவாய்’ என பார்வதிக்கு சாபமிட்டார். இங்கு புன்னைமரத்தின் கீழ் சிவலிங்கத்தை தேவி வழிபட்டதால் சாபம் நீங்கியது. இது மயிலை என்றானது. இங்கு ஈசனை வழிபடுவோருக்கு மன நிம்மதி கிடைப்பதுடன், உடல் சார்ந்த எந்த நோயாக இருந்தாலும் இங்கு வழிபட்டால் குணமடையும் என்பது நம்பிக்கை. ஷேர்!

error: Content is protected !!