News April 14, 2025
EMMY விருது வென்ற நடிகை காலமானார்

EMMY விருது வென்ற பிரிட்டன் நடிகை ஜீன் மார்ஸ் (90) காலமானார். 1970களில் வெளியான அப்ஸ்டேர்ஸ், டவுன்ஸ்டேர்ஸ் சீரிஸ் மூலம் பிரபலமானவர் ஜீன்ஸ் மார்ஸ். லண்டனில் வசித்த அவர் ஞாபக மறதி நோயால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். ஈகிள் ஹேஸ் லேண்டட், ஹவுஸ் ஆப் எலியட் உள்ளிட்ட பல சீரிஸ்களில் நடித்துள்ள அவருக்கு, 1975இல் EMMY விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 17, 2026
தேர்தல் வாக்குறுதி: திமுகவை முந்திக் கொண்ட அதிமுக

திமுகவை முந்திக் கொண்டு மகளிருக்கு ₹2,000, ஆண்களுக்கு இலவச பஸ் உள்ளிட்ட வாக்குறுதிகளை <<18879658>>அதிமுக <<>>கொடுத்துள்ளது. இதுபோன்ற பல அறிவிப்புகள் இனி வெளியாக வாய்ப்பு இருப்பதால், திமுகவுக்கு நெருக்கடியாக மாறியிருக்கிறது. அதுமட்டுமல்ல, திமுகவும் அதிமுகவை விட சிறப்பான தேர்தல் அறிக்கை கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், தேர்தலில் திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் பிரதானமாக எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News January 17, 2026
டாஸை இழந்தது இந்தியா

U-19 World Cup: இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக டாஸ் போடுவதில் சற்று தாமதமானது. தற்போது இந்திய அணி சார்பில், வைபவ் சூரியவன்ஷி, ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். IND: ஆயுஷ் மாத்ரே(C), வைபவ் சூரியவன்ஷி, வேதாந்த், விஹான், அபிக்யன் குண்டு, சவுகான், பங்கலியா, அம்பரீஷ், ஹெனில், தீபேஷ், கிலான் படேல்.
News January 17, 2026
Gold Rate-ஐ குறைக்க நடவடிக்கை எடுப்பாரா நிர்மலா?

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று சவரனுக்கு ₹1,06,240-க்கு விற்கப்படும் நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, 2024-ல் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15%-லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டது. அதேபோல், வரும் பட்ஜெட்டிலும் தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைத்தால், தங்கம் விலை கணிசமாக குறையும்.


