News May 15, 2024
EMIS இணையதளம் முடங்கியது

பள்ளி மாணவர்களின் தகவல்களை பதிவு செய்யும் EMIS இணையதளம் திடீரென முடங்கியது. தமிழக மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பெறுவது, இட மாறுதலுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட சேவைகளை EMIS இணையதளம் வழங்கி வருகிறது. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிக மாணவர்கள் இணையத்தை பயன்படுத்தியதால் முடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால், பள்ளி மாணவர்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 18, 2026
சீமை கருவேல மரங்கள்.. கோர்ட் புதிய உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட மதுரை HC உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில், சீமை கருவேல மரங்களை அகற்றிட வட மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன், தென்மாவட்டங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.செல்வம் கண்காணிப்பு அலுவலர்களாக செயல்படுவர் என்றும் கோர்ட் கூறியுள்ளது. அம்மரங்களை எப்படி அகற்றுவது என்பது பற்றி 39 உத்தரவுகள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கோர்ட் தெரிவித்துள்ளது.
News March 18, 2026
சர்ச்சை பேச்சு… நயன்தாரா பதிலடி

அன்பு குறித்த ஒரு தத்துவ வரியை தனது இன்ஸ்டா ஸ்டோரியாக நயன்தாரா பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது. அதில், ‘மழை எங்கு, யார் மீது விழுகிறோம் என்று பார்ப்பதில்லை. அதுபோலத்தான் உங்கள் அன்பு இருக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேசிய Ex அமைச்சர் <<19406314>>CV சண்முகத்திற்கு<<>> தான் நயன்தாரா இப்படி சைலெண்டாக பதிலடி கொடுத்துள்ளார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
News March 18, 2026
தமிழகத்தில் ₹42.65 கோடி பணம், பொருள்கள் சிக்கின

TN-ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 3 நாள்களுக்குள் ₹42.65 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக CEO அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். சோதனையில் ₹2.37 கோடி ரொக்கம், ₹2.88 கோடி போதைப் பொருள்கள், ₹16.42 கோடி உயர் ரக உலோகங்கள், ₹20.80 கோடி இலவச பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரொக்கத்தை திரும்பி பெற்றுக்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.


