News May 7, 2025
டெல்லியில் அவசரக் கூட்டம்.. அடுத்தடுத்து பரபரப்பு!

பாதுகாப்பு காரணங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. PM மோடி தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு முன்பு PM மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங்குடன் தனது வீட்டில் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில், <<16264690>>பாதுகாப்பு குழுவில் <<>>மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
வாக்குச்சீட்டு முறையை கொண்டு வருக: திருமாவளவன்

பார்லிமெண்ட்டில் SIR பற்றிய விவாதத்தில் பேசிய திருமாவளவன், SIR-ஐ தேர்தலையொட்டி அவசர அவசரமாக நடத்தாமல், தேர்தல் அல்லாத பிற காலங்களில் நடத்த வேண்டும் என்றார். குடியுரிமையை சோதனை செய்யும் அதிகாரம் ECI-க்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், அதிகார வரம்பை மீறி ECI செயல்படுவதாக சாடினார். EVM முறையை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
News December 11, 2025
ஒரு பெண்ணின் தலைவிதியை மாற்றிய பிஹார் இளைஞன்

பிஹாரில் திரைப்படத்தில் வருவதுபோல் ஒருவரது நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. ரயிலில் யாசகம் எடுத்துவந்த ஆதரவற்ற பெண்ணை பார்த்த இளைஞர், அதை கடந்துபோகாமல், அந்த பெண்ணின் குடும்பத்தினரை கண்டறிந்து, அவர்களுடன் அந்த பெண்ணை சேர்த்து வைத்துள்ளார். ஆனால், விதி வேறு விளையாட்டை விளையாடியது. இதனால், இருவரிடையேயும் காதல் மலர்ந்து, அது சமீபத்தில் திருமணமாக முடிந்தது. SHARE
News December 11, 2025
‘பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுக்கு ₹5,000’

2021-ல் அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக ₹2,500 வழங்கப்பட்டதாக EPS தெரிவித்தார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், இதுவரை திமுக ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் செயல்படுத்தவில்லை என கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், வரும் தைப்பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?


