News August 5, 2024

பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை

image

வங்கதேச விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்குவதை கண்டித்து, அங்கு நடைபெற்ற மாணவர்களின் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து PM பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.

Similar News

News January 17, 2026

தேனி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

நாளை தை அமாவாசை.. வீட்டில் கட்டாயம் இதை செய்யுங்க

image

*தர்ப்பணம் செய்த பின் வீட்டிற்கு திரும்பி சென்று முன்னோரின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சார்த்த வேண்டும். *முன்னோர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். *முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். *வீட்டில் தெய்வம் சம்பந்தமான பூஜைகளை தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்.

News January 17, 2026

துடைத்து எறியப்பட்ட காங்., மறுபரிசோதனை செய்யுமா?

image

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 207 நகராட்சிகளை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஆனால், காங்., படுதோல்வியடைந்து துடைத்து எறியப்பட்டிருகிறது. இத்தேர்தல் முடிவு, காங்., கட்சியினர் தங்களை மறுபரிசோதனை செய்வதற்கான முக்கிய காலகட்டத்தில் இருப்பதை வெளிக்காட்டுவதாகவும், மக்கள் பிரச்னையை கையில் எடுத்து களமாட வேண்டும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!