News December 4, 2024
இரவோடு இரவாக எமர்ஜென்சி அமலுக்கு வந்தது!

தென் கொரியாவில் இரவோடு இரவாக எமர்ஜென்சி சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் அமல்படுத்தியுள்ளார். தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வட கொரிய கம்யூ. படைகளின் துணையுடன் எதிர்க்கட்சிகள் தென் கொரியாவில் கிளர்ச்சியை ஏற்படுத்த சதி செய்கின்றனர். தேசத்தின் நிலைத்தன்மை, சுதந்திரம் & பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News November 21, 2025
இந்திய போர் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு

துபாய் ஏர் ஷோவில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்ததாக IAF அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விமானியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் IAF தெரிவித்துள்ளது. மேலும், விபத்து குறித்து விசாரிக்க விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. துபாயில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 21, 2025
RAIN ALERT: 28 மாவட்டங்களில் மழை பொளந்து கட்டும்

அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, செங்கை, சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூர், திருப்பத்தூர், தி.மலை, வேலூர், விழுப்புரத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. உங்க ஊரில் இப்போ மழையா?
News November 21, 2025
ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு

திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கடந்த ஆகஸ்டில் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ED சோதனை நடத்தியிருந்தது. அப்போது, இந்திராணி வீட்டில் 15 மணிநேரத்துக்கும் மேலாக ED சோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


