News April 24, 2025
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்

அரசு ஊழியர்களை பணியைவிட்டு நீக்குதல், அரசு செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் டாட்ஜ்(DOGE) துறை தலைவர் பதவியிலிருந்து எலான் மஸ்க் விலகியுள்ளார். USA அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு உருவாக்கப்பட்ட இந்த புதிய துறை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறுவேன் என்றும் மஸ்க் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
Similar News
News April 24, 2025
ரேஷன் கடைகளில் காலியிடம் நிரப்பப்படும்: அமைச்சர்

ரேஷன் கடைகளில் கட்டுநர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், கிராமங்களில் 500 குடும்ப அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளில் காலியாக உள்ள கட்டுநர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விரைந்து பொருள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
News April 24, 2025
தந்தையால் மகள் பாலியல் வன்கொடுமை: மறைத்த தாய்

மகளை தந்தை, உறவினர்கள் ரேப் செய்ததை மறைத்த தாய் மீது பதிவான போக்சோ வழக்கை டெல்லி HC ரத்து செய்தது. 10 வயது சிறுமி, பலமுறை 2023-ல் ரேப் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசிடம் முன்கூட்டி தகவல் தெரிவிக்காததை சுட்டிக்காட்டி, விசாரணை நீதிமன்றத்தால் தாய் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வழக்கை HC ரத்து செய்தது.
News April 24, 2025
ஜெயிலர் 2-வில் பகத் பாசில்..?

ஜெயிலர் 2 படம் இப்போதே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் ரஜினி மட்டுமே தற்போது வரை நடிப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், தற்போது ஒரு நியூஸ் படுவைரலாகி வருகிறது. படத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. யோசிச்சி பாருங்க ரஜினி- சிவராஜ்குமார்- மோகன்லாலுக்கு எதிராக பகத்… எப்படி இருக்கும்?