News March 6, 2025
‘இந்தியர்களை எலான் மஸ்க் மிஞ்ச முடியாது’

எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்கள் இந்திய சந்தைக்குள் நுழைவது குறித்து ஜிண்டால் குழுமத் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியர்களான எங்களை மீறி எலான் மஸ்க்கால் இங்கு சாதிக்க முடியாது. இங்குள்ள டாடா, மஹிந்திரா நிறுவனங்களை டெஸ்லாவால் பின்னுக்கு தள்ள இயலாது. எலான் மஸ்க் ஸ்மார்ட்டான நபராக இருக்கலாம். பல பிரமிக்கத்தக்க செயல்களை செய்யலாம். ஆனால், இங்கு அவரால் முடியாது எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 7, 2025
தந்தையின் ஈகோவுக்கு பலியான பிஞ்சுக் குழந்தை!

உ.பி.யைச் சேர்ந்த மோகித் என்பவருக்கும், அவரது அண்டை வீட்டுக்காரரான ராமு என்பவருக்கும் சமீபத்தில் சண்டை ஏற்பட்டது. ஆனால், மோகித்தின் 5 வயது மகளான தானி, எப்போதும் போல ராமுவின் வீட்டுக்கு சென்று விளையாடி வந்திருக்கிறாள். பலமுறை சொல்லியும் மகள் கேட்காததால் ஆத்திரமடைந்த மோகித், குழந்தை தானியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 4 துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார். தற்போது மோகித் சிறையில் உள்ளார்.
News March 7, 2025
த்ரிஷாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்

நடிகை த்ரிஷாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது குறித்த சுவாரஸ்ய தகவலை நடிகர் ராதா ரவி வெளியிட்டுள்ளார். ‘லேசா லேசா’ படத்தில் துணை நடிகைகளில் ஒருவராகத்தான் த்ரிஷா ஒப்பந்தமாகியிருந்தாராம். ஷூட்டிங்கின்போது, மும்பையில் இருந்து வர வேண்டிய நடிகை தாமதமாக வந்ததால், அங்கிருந்த த்ரிஷாவை ஹீரோயினாக்க இயக்குநர் ப்ரியதர்ஷன் முடிவு செய்தாராம். எவ்வளவு லக்கி பாருங்க!
News March 7, 2025
பின்வாங்கினார் டொனால்ட் டிரம்ப்

மெக்சிகோ நாட்டின் மீதான வரி விதிப்பை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் அதிபராக பொறுப்பேற்றவுடன், அண்டை நாடுகளான கனடா & மெக்சிகோ பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி விதித்தார். இது வர்த்தகப் போரை உருவாக்கும் நிலை ஏற்பட்டதால், சில பொருட்களுக்கு வரியை நிறுத்திவைத்து, டிரம்ப் பின் வாங்கியுள்ளார். ஆனால், கனடா மீதான வரிகள் குறைக்கப்படவில்லை.