News April 7, 2025
மின்னணு வாக்குப்பதிவு: மனுவை தள்ளுபடி செய்தது SC

தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ண EC-க்கு உத்தரவிடக்காேரி தொடரப்பட்ட மனுவை SC தள்ளுபடி செய்தது. இதுதாெடர்பாக டெல்லி HC-யின் தீர்ப்பை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை SC விசாரித்தது. அப்போது, ஏற்கெனவே தேர்தல் விவகாரத்தில் பலமுறை தீர்ப்பு அளிக்கப்பட்டு விட்டதாகவும், மீண்டும் அதே விவகாரத்தை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்தது.
Similar News
News April 8, 2025
பவன் கல்யாணால் தேர்வை மிஸ் செய்த மாணவர்கள்

பவன் கல்யாணின் கான்வே செல்வதற்காக சாலைகள் மூடப்பட்டதால் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை 30 மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நிறுத்தத்திற்கும் மாணவர்கள் சரியான நேரத்துக்கு செல்லாததற்கும் தொடர்பில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 229 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. ▶பொருள்: சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.
News April 8, 2025
அருண் விஜய் படத்தில் தனுஷ்!! செம காம்போ

‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயை வைத்து ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இந்நிலையில் ரெட்ட தல திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.