News March 24, 2025
பாய்ந்த மின்சாரம்! பரிதாபமாக போன உயிர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திமுக கொடிக் கம்பம் அகற்றும்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்றுமாறு பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் ஊத்தங்கரையில் கொடிக் கம்பம் அகற்றும்போது தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
Similar News
News December 3, 2025
புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக IMD தெரிவித்துள்ளது. காலை 5.30 மணி நிலவரப்படி புதுச்சேரி அருகே கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தரைப்பகுதிக்கு வந்ததும் மேலும் வலுவிழக்கும் எனவும் கணித்துள்ளது. மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
News December 3, 2025
FLASH: மீள முடியாமல் தவிக்கும் இந்திய சந்தைகள்!

பங்குச்சந்தைகள் கடந்த 3 நாள்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. இன்று வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 264 புள்ளிகள் சரிந்து 84,873 புள்ளிகளிலும், நிஃப்டி 96 புள்ளிகள் சரிந்து 25,935 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், கடந்த 3 நாள்களில் மட்டும் 833 புள்ளிகளை இழந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News December 3, 2025
ஒரே நாடு, ஒரே தேர்தல்: தேர்தல் கமிஷனரிடம் ஆலோசிக்க முடிவு

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா பற்றி ஆலோசிக்க ஞானேஷ் குமாருக்கு பார்லி., கூட்டு குழு அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் EC-க்கு வழங்க வேண்டிய அதிகாரத்தின் அளவு விவாதத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளதால் ஞானேஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


