News May 14, 2024
தமிழகத்தில் மின் நுகர்வு குறைகிறது

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் மின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஏப்ரல் மாதத்தில் தினசரி மின் நுகர்வு 45 கோடி யூனிட்கள் வரை உயர்ந்தது. தற்போது மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் தினசரி மின் தேவை 36 கோடி யூனிட்களாக குறைந்துள்ளது. இதனால், இனி மின்வெட்டு இருக்காது என்று நம்பப்படுகிறது.
Similar News
News April 9, 2026
திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் சோக முடிவு

ஆசை ஆசையாய் வளர்த்த மகள், திருமணமான ஒரே மாதத்தில் சடலமாகக் கிடந்தால் பெற்றோருக்கு எப்படி இருக்கும்? அப்படியொரு சோக சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. பிறந்த வீட்டிற்கு கணவருடன் விருந்துக்குச் சென்ற தேவிஸ்ரீ(19) ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பெரும் சோகம். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News April 9, 2026
IPL டாஸ்: லக்னோ அணி பவுலிங்

ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் KKR -க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று LSG பவுலிங் தேர்வு செய்துள்ளது. கடந்த முறை KKR அணியில் இடம்பெறாத சுனில் நரைன் இந்த போட்டியில் களமிறங்க உள்ளார். ஆனால், வருண் சக்கரவர்த்தியின் காயம் குணமடையாததால் இந்த போட்டியிலும் அவர் விளையாடவில்லை. கடந்த முறை விளையாடிய அதே அணியுடன் LSG களம் காண்கிறது. காலை முதல் மழை பெய்து வருவதால் போட்டி தடைப்பட வாய்ப்புள்ளது.
News April 9, 2026
அதிமுக + விஜய் கூட்டணி.. பரபரப்பை கிளப்பினார்

அதிமுக, தவெக இடையேயான கூட்டணி பேச்சு தொடர்பாக செங்கோட்டையன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். விஜய் ஆதரவுடன் CM-ஆகி ₹5,000 கோடி சம்பாதிக்கலாம் என EPS நினைத்தார். அதற்கு நான் தடையாக இருந்ததால் அவருக்கு என் மீது ஆத்திரம் என அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை விட்டுக் கொடுத்ததற்கான பரிசுதான் துரோகி என்ற பட்டம் எனவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


