News March 9, 2025
தமிழகத்தில் மின் பயன்பாடு அதிகரிப்பு

கடும் வெயில், பயன்பாடு அதிகரிப்பால், தமிழக மின் நுகர்வு நேற்று முன்தினம், 40.62 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, இந்தாண்டில் இதுவரையிலான மின் நுகர்வில் அதிகபட்ச அளவாகும். கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.2024 மே 2ல், உச்ச அளவாக மின் நுகர்வு, 45.43 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
Similar News
News March 9, 2025
திருப்பதியில் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள குடூர் ரயில் நிலையம் அருகே ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்ற போது, இளைஞர் ஒருவர் சிகப்புத் துணியை காண்பித்து ரயிலை நிறுத்தினார். ஓட்டுநர் இறங்கி வந்து பார்த்த போது அங்கு ரயில் தண்டவாளம் உடைக்கப்பட்டிருந்தது. இளைஞரின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். மேலும், இது சதிச்செயலா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
News March 9, 2025
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாற்றம்?

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ₹1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வருமான வரி செலுத்துவோர், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளோர், சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோர், அரசு ஊழியர்கள் ஆகியோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. இந்நிலையில், வரும் பட்ஜெட்டில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
News March 9, 2025
4 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் தற்போதைக்கு இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் மற்றும் லேதம் விக்கெட்டுகளை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர். வருண், ஜடேஜா தலா விக்கெட்டையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 23 ஓவர்களில் 108 ரன்களை நியூசிலாந்து எடுத்துள்ளது.