News April 4, 2025
நாளை மின்வாரிய சிறப்பு முகாம்

தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 5) சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மின் இணைப்பு, கட்டணம் தொடர்பான பிரச்னைகள், சேதமடைந்த மின் கம்பங்கள், மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம் ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு இங்கு தீர்வு காணலாம். நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை Executive Engineer/O&M அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். #SHAREIT
Similar News
News December 1, 2025
3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை(டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கனமழை பெய்துவரும் நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. மேலும், பல மாவட்டங்களில் மழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 1, 2025
தோட்டக்கலைத் துறையில் திமுக ஊழல்

தோட்டக்கலைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ₹136 கோடியில் முறைகேடு நடந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் தொடர்பான செய்திகள் வெளிவந்தும் இன்னும் ஏன் CM ஸ்டாலின் பதிலளிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கம்போல் வெள்ளை பேப்பரை தூக்கிகாட்டி உருட்டாமல், செலவினங்கள் மற்றும் டெண்டர் நடைமுறைகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 1, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக சென்னையில் நாளை(டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. உடனடி தகவலுக்கு WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.


