News January 31, 2025
ஆளில்லாத வீட்டுக்கு ₹7,46,001 மின் கட்டணம்

திண்டுக்கல்லில் ஆளில்லாத வீட்டுக்கு ₹7.46 லட்சம் EB பில் அனுப்பப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. குல்லிசெட்டிபட்டியில் உள்ள வீடு 2 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் நிலையில், அதன் உரிமையாளரான, பூ வியாபாரி ரவிச்சந்திரனின் செல்போனுக்கு ₹7,46,001 பில் கட்டும்படி மெசேஜ் வந்ததால் ஷாக் ஆகியுள்ளார். மின்வாரியத்திடம் கேட்டபோது தவறுதலாக வந்துவிட்டதாக விளக்கம் அளித்தார்களாம். உங்களுக்கு இது போன்று நடந்திருக்கா?
Similar News
News March 2, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியானது Update

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் மொத்தமாக 5 கட்டங்களாக தேர்தல் நடத்த ECI திட்டமிட்டுள்ளது. அதன்படி, அடுத்தவாரம் தேர்தல் தேதியை CEC ஞானேஷ் குமார் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. கடந்த முறை போன்று ஏப்ரலில் அல்லாமல், மே மாதமே தேர்தல் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
News March 2, 2026
விஜய் பட தயாரிப்பாளருக்கு வந்த அடுத்த சோதனை!

ஜனநாயகனை அடுத்து யஷின் ’டாக்ஸிக்’ படத்தை தயாரித்துள்ளது KVN நிறுவனம். அப்படம் ரீலிசாகும் மார்ச் 19-ம் தேதி அன்று ’துரந்தர் 2’-ம் ரிலீசாகிறது. டாஸ்ஸிக் ரன்னிங் டைம் 3.25 மணி நேரமாகவும், துரந்தர் 2 ரன்னிங் டைம் 3.40 மணி நேரமாகவும் இருப்பதால் எந்த தியேட்டரிலும் கூடுதல் காட்சிகள் திரையிட முடியாத நிலை. இதனால் தியேட்டர் ஓனர்கள் படத்தின் ரன்னிங் டைமை குறைக்க கோரி KVN-க்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
News March 2, 2026
குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பா இது இருக்கணும்

மக்களே, உங்கள் வீட்டில் 3 வயதுக்கு கீழ் குழந்தைகள் இருக்காங்களா? இவர்கள் கதவை திறந்து மூடும்போது கண்டிப்பாக கை விரல்களை நசுக்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதனால், கைகள் வீங்குவதோடு, சில நேரங்களில் எலும்பு முறிவு கூட ஏற்படலாம். உங்கள் பிஞ்சு குழந்தையின் பிஞ்சு விரல்களை காக்க ஆன்லைனில் கிடைக்கும் Door guard/ Door stopper-ஐ பயன்படுத்தலாம். அனைவருக்கும் யூஸ் ஆகும். SHARE THIS.


