News November 23, 2024

இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

image

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் கிடைக்கும். பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். 69,000-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

Similar News

News December 28, 2025

டிசம்பர் 28: வரலாற்றில் இன்று

image

*1885 – இந்திய தேசிய காங்கிரஸ் தொடக்கம் *1932 – தொழிலதிபர் திருபாய் அம்பானி பிறந்தநாள் *1937 – தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்தநாள் *1947 – எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்தநாள் *1952 – அரசியல்வாதி அருண் ஜெட்லி பிறந்தநாள் *1964 – அரசியல்வாதி ஜி.கே.வாசன் பிறந்தநாள்

News December 28, 2025

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்?

image

உள்ளூரில் NZ, SA அணிகளுக்கு எதிராக டெஸ்டில் இந்தியா ஒயிட்வாஷ் ஆனதால் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கம்பீரை டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க BCCI ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக Ex வீரர் லட்சுமணனை பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது லட்சுமண் BCCI அகாடமியின் உயரிய பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 28, 2025

உக்ரைனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த புடின்

image

ரஷ்யாவுடனான பிரச்னையை அமைதியான முறையில் தீர்க்க உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என புடின் தெரிவித்துள்ளார். இது தொடர்ந்தால், தங்களது இலக்குகளை ராணுவ நடவடிக்கையின் மூலம் அடைவோம் என அவர் எச்சரித்துள்ளார். ஆனால், அமைதியை எட்டும் தங்களது முயற்சிகளுக்கு தாக்குதல் மூலமாக ரஷ்யா பதிலளிப்பதாக ஜெலன்ஸ்கி சாடியுள்ளார். இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அதிபர் டிரம்ப்பை ஜெலன்ஸி இன்று சந்திக்கிறார்.

error: Content is protected !!