News June 6, 2024
இன்றுடன் முடிவுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் மார்ச் 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் இன்று (ஜூன் 6) நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் ₹50,000-க்கு மேல் பணம், பொருள்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இருக்காது.
Similar News
News March 5, 2026
கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

போரில் கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச்சடங்கு நேற்று மாலை மஷாத் நகரில் உள்ள ரேசா புனித தளத்தில் நடைபெறும் என ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், டெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின் முக்கிய நகரங்கள் மீதான தாக்குதல், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சடங்கின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் அரசு கூறியுள்ளது.
News March 5, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 628 ▶குறள்:
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.
News March 5, 2026
ஆதிக்க வெறியின் ஆணவம் அழிப்பு: CM ஸ்டாலின்

திருச்சியில் தமிழில் <<19294297>>‘கர்தவ்ய த்வார்<<>>’ என எழுதப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில் அது நீக்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் அகற்றப்பட்டது ஹிந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும் தான் என CM ஸ்டாலின் தனது X பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், போலி தமிழ்ப்பற்று காட்டுபவர்களையும், அவர்களுக்கு துணைநின்று TN-ற்கு துரோகம் இழைப்போரையும் மக்கள் அகற்றுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.


