News March 16, 2024
ELECTORAL BONDS : உண்மையை வெளியிட்ட பத்திரிகையாளர்

எஸ்.பி.ஐ., வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்கள் நாட்டின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ED சோதனை நடந்த பெரிய நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக கட்சிகளுக்கு வழங்கியது அம்பலமாகியுள்ளது. இந்த உண்மை வெளியாக காரணமாக இருந்த பத்திரிகையாளர் பூனம் அகர்வால். இதழியல் துறையில் புலிட்சர் விருதுப் பெற்ற அவரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 311 ▶குறள்: சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். ▶பொருள்: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும், அதன் பொருட்டுப் பிறருக்கு கேடு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.
News April 20, 2025
விநோதம்: இறந்தவர்களை மணக்கும் பெண்கள்!

சீனாவில் இறந்தவர்களை மணக்கும் விநோத பழக்கம் உள்ளது. இறந்தவர்கள் அடுத்த ஜென்மத்தில், பிரம்மச்சாரியாக இருப்பதை தவிர்க்க இந்த பேய் திருமணம் செய்யப்படுகிறது. இறந்த மகன், மகளுக்கு ஃபெய் சுங் மாஸ்டரை நியமித்து வரன் தேடுகிறார்கள். வரன் அமைந்ததும், கல்லறையில் இருந்து சடலம் எடுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது. இந்த பழக்கத்திற்கு சீன அரசு தடைவிதித்திருந்தாலும் இன்னும் தொடர்கிறது.
News April 20, 2025
சின்னத்துரை மீதான தாக்குதல்: 2 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டகிராம் மூலம் பழகியவர்கள் சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த போலீஸ், சங்கரநாராயணன், சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளது. இதில், தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீஸ் தேடி வருகிறது.