News April 29, 2024
மே 17ஆம் தேதி வெளியாகிறது ‘எலக்சன்’

‘உறியடி’, ‘பைட் கிளப்’ படங்களைத் தொடர்ந்து விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ படம் மே 17ஆம் தேதி வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் இயக்கியுள்ள இப்படத்துக்குக் கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற ‘எலெக்சன்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 26, 2026
SHOCKING.. தங்கம் விலை தடாலடியாக மாறியது

2026-ம் ஆண்டின் முதல் மாதமே முடியவில்லை. அதற்குள் தங்கம் விலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2026 ஜன.1 அன்று, சென்னையில் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹99,040 ஆக இருந்தது. ஆனால், இன்று சவரன் ₹1,20,200 ஆக வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில், வெள்ளி கிலோவுக்கு ₹1.47 லட்சம் உயர்ந்து ₹3.75 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. தங்கம், வெள்ளி இறங்குமுகம் காணுமா?
News January 26, 2026
வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதி

தேசிய கீதம் போல வந்தே மாதரம் பாடலுக்கும் எழுந்து நிற்கும் விதியை கொண்டு வருவதற்கு உள்துறை அமைச்சகம் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, 1971-ல் கொண்டுவரப்பட்ட தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்புச் சட்டமானது தேசிய கீதத்திற்கு மட்டுமே பொருந்தும். எனவே, வந்தே மாதரம் பாடலுக்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.
News January 26, 2026
டபுள் இன்ஜின், ரிப்பேர் ஆன இன்ஜின்: கனிமொழி

பல்வேறு திசைகளில் இருந்து பல கனவுகளுடன் தமிழ்நாட்டை நோக்கி படையெடுப்பவர்களுக்கு தமிழக பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி தெரிவித்துள்ளார். பாஜக சொல்லும் டபுள் இன்ஜின், ரிப்பேர் ஆன இன்ஜினாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் சாதித்துக் காட்டியதுதான் திராவிட மாடல் இன்ஜின் என மோடியின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.


