News May 25, 2024

ELECTION: இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு

image

மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கவுள்ளது. டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 11.13 கோடி பேர் வாக்களிக்கவுள்ளனர். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்கும் 5 கட்ட வாக்குப்பதிவில் 57.79 வாக்குப்பதிவு மட்டுமே நடைபெற்றிருப்பதால் அதனை அதிகரிக்கத் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

Similar News

News March 5, 2026

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

யூரியா உற்பத்தி குறைந்தது.. விலை உயருமா?

image

மத்திய கிழக்கில் நடந்த போர் காரணமாக கத்தாரில் LNG உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் யூரியா உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. LNG எரிசக்திக்கு மட்டுமல்லாமல், யூரியா உற்பத்திக்கும் முதன்மை மூலப்பொருளாக உள்ளது. யூரியா பற்றாக்குறை ஏற்பட்டால், விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உர அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News March 5, 2026

OMG! ரொம்ப நேரம் உட்கார்ந்தா, இப்படி ஒரு ஆபத்தா…

image

அலுவலகமோ வீடோ, நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்வதால் பல்வேறு நோய்கள் வரும் என்கின்றனர் டாக்டர்கள்: *உடல்பருமன் *இதயநோய் & சில வகை புற்றுநோய்கள் *ரத்த சர்க்கரை *தொப்பை & இடுப்பை சுற்றி கொழுப்பு சேர்வது *முதுகு-கழுத்து வலி *தொடை தசைகள் பலவீனமாதல் *ஜீரண பிரச்சனை போன்றவை ஏற்படலாம். இவற்றை தவிர்க்க 30 mins-க்கு ஒருமுறை எழுந்து நடக்கலாம், எளிதான உடற்பயிற்சிகள் (வாரம் 150 mins) அவசியம்.

error: Content is protected !!