News March 17, 2024
கட்டுப்பாட்டு மையத்தினை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மாநில அவசர செயல்பாட்டு மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு மையத்தினை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மா.தேர்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், துணை தலைமை தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
Similar News
News November 18, 2025
புதுவை: படகு இயக்கிய தனியார் நிறுவனம் மீது வழக்கு

பழைய துறைமுகம் பகுதியில் படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் விசாரித்ததில், படகு மூலம், 62 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. வானிலை எச்சரிக்கை அறிவிப்பை மீறி சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற, தனியார் வாட்டர் அட்வென்ச்சர் நிறுவனத்தின் மீது, போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்து

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.