News March 28, 2024
238 முறை தோல்வி அடைந்த ‘தேர்தல் மன்னன்’

தமிழகத்தின் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன், மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை 238 சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட அவர், அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளார். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “நான் வெற்றி பெற வேண்டுமென்று போட்டியிடவில்லை. வெற்றி என்பது 2ஆம் பட்சம். ஆனால், என் கடைசி மூச்சு வரை போட்டியிட்டுக் கொண்டே இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளாா்.
Similar News
News March 23, 2026
புதுச்சேரியில் திமுக – காங் கூட்டணி உறுதியானது

புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதியானது. இதில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அதேசமயம் திமுகவுக்கு 12 தொகுதிகளும், விசிக மற்றும் CPI-க்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில், இன்று நள்ளிரவில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கூறப்படுகிறது.
News March 23, 2026
அதிமுகவில் இணைந்த OPS ஆதரவாளர்கள்

திமுகவில் OPS இணைந்ததால் ஏமாற்றமடைந்த அவரது ஆதரவாளர்கள் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை Ex துணை மேயர் மணிகண்டன், வெள்ளூர் Ex ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தஞ்சை மாவட்ட OPS ஆதரவாளர்கள், EPS-ஐ நேரில் சந்தித்து தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தனது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக அதிமுகவில் இணைவதால் OPS கவலையில் உள்ளாராம்.