News March 16, 2024
புதுச்சேரியில் ஏப்ரல்.19ம் தேதி தேர்தல்

புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு ஏப்.19ம் தேதி தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச்.20ம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ள ஆணையம், வேட்புமனு தாக்கல் நிறைவு மார்ச்.27 என்றும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி தேதி மார்ச்.30 என்றும் கூறியுள்ளது. வேட்புமனு பரிசீலனை மார்ச்.28ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜீன்.4ம் தேதியும் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர்

புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “டாக்காவில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பை- 2025 இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கபடி அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச அளவிலான கபடிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பெற்றுள்ள வெற்றி – பெண்களின் சக்தி, தைரியம், திறமை என்ன என்பதை உலகுக்கு மீண்டும் நிருபித்துள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
புதுச்சேரி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

புதுச்சேரி மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை <
News November 25, 2025
புதுவை: மின் இணைப்பு துண்டிக்கப்படும் – எச்சரிக்கை

புதுவை மின்துறை நகர செயற்பொறியாளர் நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், புதுவை மின்துறை நகர இயக்குதல் பராமரித்தல் கோட்டம், நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட கடற்கரை சாலை, வம்பாகீரைப்பாளையம், திப்புராய்பேட், நெல்லித்தோப்பு, சாரம், பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள்மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார்.


