News March 25, 2024
தேர்தல் திருவிழா அழைப்பிதழ்

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் களைகட்டியுள்ள சூழலில், தேர்தல் திருவிழா அழைப்பிதழ் என்ற பெயரில் நெல்லை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருமண அழைப்பிதழ் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள அந்தப் பத்திரிகையில், தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் தேதி, வாக்குப்பதிவு நேரம் உள்ளிட்ட விவரங்களுடன், 100% வாக்குப் பதிவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
ரேஷன் கடை திறந்திருக்கா? ஃபோன்லயே தெரிஞ்சிக்கலாம்

ரேஷன் கடைக்கு செல்லும்போது சில சமயங்களில் கடை மூடியிருக்கும், பல நேரங்களில் கேட்கும் பொருள் இல்லை என்பார்கள். இந்த ஏமாற்றத்தை தவிர்க்க, ஒரு SMS போதும்! ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட போன் எண்ணில் இருந்து 89399 22990 or 97739 04050 எண்களுக்கு PDS 101(என்ன பொருள்கள் உள்ளது என அறிய), PDS 102 (கடை உள்ளதா என அறிய) என மெசேஜ் அனுப்பினால், தமிழிலேயே தகவல்கள் கிடைத்துவிடும். அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News January 28, 2026
ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: தவெக

அதிமுக கூட்டணியில் அன்புமணியும், திமுக கூட்டணியில் விசிகவும் ராமதாஸ் தரப்பை இணைக்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகிறது. இதனிடையே, தவெக தரப்பில் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுவரை ராமதாஸ் தரப்பு உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக நிர்வாகி கூறியுள்ளார்.
News January 28, 2026
கூட்டணி கட்சிகளால் திமுகவுக்கு நெருக்கடியா?

பிப். 3-ம் தேதிக்கு பிறகு கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ்(25), விசிக(6), CPI(6), CPM(6) உள்ளிட்ட கட்சிகள் இம்முறை அதிக சீட்டுகளை கேட்க திட்டமிட்டுள்ளதால், அது திமுகவுக்கு நெருக்கடியை அதிகரிக்கலாம். கமலின் மநீம கட்சியும் அதிக தொகுதிகளை கேட்பதால் இம்முறை DMK போட்டியிடும் இடங்கள் கடந்த முறையைவிட குறைய வாய்ப்புள்ளது.


