News February 17, 2025
தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டார்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை கூடிய தேர்வுக்குழு, புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நடத்திய கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இறுதி செய்யப்பட்டவரின் பெயர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இன்றே முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 11, 2025
பாஜகவின் வெற்றிக்கு உதவுகிறாரா PK

பிஹாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஒற்றை இலக்க இடம்(0-9) தான் என்றே கணிப்புகள் கூறுகின்றன. அதேநேரம் அக்கட்சி 9% – 13% வாக்குகள் பெறும் எனக் கணிக்கப்படுகிறது. இது NDA-மகா கூட்டணிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாகும். ஆளும் JDU-BJP கூட்டணியின் எதிர்ப்பு வாக்குகளையும், படித்த இளைஞர்களின் வாக்குகளையும் ஜன் சுராஜ் ஈர்த்து, NDA வெற்றிக்கு வழிவகுத்துள்ளது எனத் தெரிகிறது.
News November 11, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை காலமானார்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லாண்ட்(84) காலமானார். கோல்டன் குளோப் உள்ளிட்ட மதிப்புமிக்க பல விருதுகளை வென்ற இவர், 1987-ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Sting (1973), Private Benjamin (1980), JFK (1991), Bruce Almighty (2003) உள்ளிட்ட 260-க்கும் மேற்பட்ட படங்களில் கிர்க்லாண்ட் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 11, 2025
தேன் கெட்டுப்போவதில்லை… ஏன் தெரியுமா?

தேன் எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப்போகாது என்பார்கள். ஆனால் அது, முறையாக மூடி பாதுகாக்கப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும் என்பது முக்கியமானது. அப்போதுதான் அது கெட்டுப்போகாமல் இருக்கும். சுவை மிகுந்த தேன், எப்படி நீண்டநாள் கெடாமல் அப்படியே உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.


