News April 25, 2024
பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் மோடி, ராகுல் ஆகியோரின் சர்ச்சை பேச்சு குறித்து 29ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்க பாஜக மற்றும் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மோடிக்கு எதிராக காங்கிரசும், ராகுலுக்கு எதிராக பாஜகவும் புகார் அளித்தன. இதை பதிவு செய்து கொண்ட தேர்தல் ஆணையம், 2 கட்சிகளின் தலைவர்களும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
வாக்குத் திருட்டு.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

எங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்றால் ஜம்மு & காஷ்மீரில் இருந்து கூட மக்களை அழைத்து வருவோம் என கேரள BJP துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாஜக, வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், திருச்சூர் லோக் சபா தேர்தலில் சட்டவிரோதமாக வாக்காளர்கள் இணைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, இவ்வாறு அவர் பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News August 24, 2025
யூத அரசுக்கு எதிரான நவீன அவதூறு: இஸ்ரேல் தாக்கு

காசாவுக்குள் மனிதநேய உதவிகளை இஸ்ரேல் தடுத்து வருவதாக ஐ.நாவின் IPC அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், இது முழுக்க முழுக்க பொய் என்றும், யூத அரசுக்கு எதிரான நவீன ரத்தம் மிகுந்த அவதூறு என்றும் இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக கூறியுள்ளார். காசாவில் உள்ள ஒருவருக்கு ஒரு டன் வீதம் 2 மில்லியன் டன் உதவிப் பொருள்களை அனுமதித்துள்ளதாகவும் அவர் X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News August 24, 2025
பதவி பறிப்பு மசோதாவில் முதலில் PM இல்லை: ரிஜிஜு

PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த மசோதாவுக்கான பரிந்துரையின்போது PM பதவி இடம்பெறவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். ஆனால், மோடி இதனை ஏற்க மறுத்ததாகவும், PM-ம் ஒரு குடிமகன், அவருக்கு இந்த சிறப்பு பாதுகாப்பு இருக்கக்கூடாது என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதன்பிறகே இந்த மசோதாவில் PM பதவி சேர்க்கப்பட்டுள்ளது.