News February 12, 2025

தப்பு செய்யும் தேர்தல் ஆணையம் : சி.வி.சண்முகம்

image

அதிமுக வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு குறித்து பேசிய சி.வி.சண்முகம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் கருத்துக்களை கேட்டு தேர்தல் ஆணையம் தவறு செய்துள்ளதாக விமர்சித்துள்ளார். உட்கட்சி விவகாரங்களில் தலையிட தங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதை விசாரணையில் தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அதிகார வரம்பை மீறி செயல்படும் EC, கட்சிக்கு தொடர்பற்ற தற்குறிகளின் மனுக்களை விசாரிக்கக் கூடாது என்றார்.

Similar News

News February 12, 2025

குரங்கு கையில் கிடைத்த பூமாலை: செந்தில் பாலாஜி

image

அதிமுகவை அழிக்கும் வேலைகளில் தன்னால் முடிந்த அனைத்தையும் இபிஎஸ் செய்து வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறை கூறியுள்ளார். குரங்கு கையில் கிடைத்த பூமாலையை போன்று, அதிமுகவை சின்னாபின்னமாக்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தோல்வி மேல் தோல்விகளை சந்திக்கும் இபிஎஸ், திமுகவை குறைசொல்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

News February 12, 2025

மீளாத இந்திய சந்தைகள்

image

கடந்த இரண்டு நாள்களாக கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று பெரிய மாற்றமின்றி காணப்பட்டன. நிஃப்டி இன்று 12 புள்ளிகள் குறைந்து 23,059 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. கடந்த 5 மாதங்களில் சுமார் 12 சதவீத மதிப்பினை இழந்திருக்கும் நிஃப்டி 50 பங்குகள், இன்று மீளும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த நிலையில், முன்னேற்றம் இன்றி ஏமாற்றமே மிஞ்சியது.

News February 12, 2025

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

image

கடந்த 6 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் பூமிக்கு திரும்பவுள்ளார். மார்ச் 25ஆம் தேதிக்கு பதிலாக 12ஆம் தேதியே விண்ணில் ஏவப்படும் SpaceX விண்கலம், புட்ச் வில்மோர் & சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரவுள்ளது. இவர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொண்டதற்கு காரணம் பைடன்தான் என்று USAவின் தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!