News April 23, 2025

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

image

மகாராஷ்டிரா தேர்தல் விவகாரத்தில் ராகுல் காந்தி ஆதாரமற்ற <<16168585>>குற்றச்சாட்டுகளை<<>> முன்வைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் இந்த தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதுடன், அரசியல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு வேதனை அளிப்பதாக உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Similar News

News April 23, 2025

வெளியான தீவிரவாதிகளின் வரைபடம்…

image

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரின் வரைபடங்களை NIA வெளியிட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவதர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலை வைத்து இந்த வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பஹல்காமை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

News April 23, 2025

எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,500க்கும் மேல் உயர்வு

image

எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,500க்கும் மேல் உயர்வடைந்துள்ளது. ஒரு யூனிட் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்டவை ரூ.1,000 உயர்த்தப்படும் என்று அதன் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர். எனினும், ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.4,900-ல் இருந்து ரூ.6,450ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.3,900ல் இருந்து ரூ.5,523ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பி.சாண்ட் விலை ரூ.5,800ல் இருந்து ரூ.7,552ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

News April 23, 2025

கில்லுக்கு குவியும் வெற்றிகள்.. பாராட்டிய முன்னாள் வீரர்

image

ஒரு பேட்ஸ்மேனாக அசத்துவது மட்டுமின்றி கேப்டனாகவும் களத்தில் மிகச் சிறப்பாக ஷுப்மன் கில் செயல்படுவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார். முன்பு வளர்ந்து வரும் வீரராக இருந்த அவர் தற்போது மிகச் சிறப்பான கேப்டனாக மாறியுள்ளதாகவும் ரெய்னா தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் தலைமையில் 8 போட்டிகளில் விளையாடி உள்ள குஜராத் அணி 6-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

error: Content is protected !!